அல்லு அர்ஜுனாக மாறிய ரவீந்திர ஜடேஜா... - இணையத்தில் செம்ம வைரல்

sports-cricket
By Nandhini Dec 24, 2021 07:40 AM GMT
Report

சமீபத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல், திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை அள்ளியுள்ளது.

குறிப்பாக, நடிகை சமந்தா நடனமாடி இருந்த 'ஒ சொல்றியா மாமா' என்ற பாடல், வேற லெவலில் வைரலானது.

இப்பாடலை, ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் கொண்டாடித் தீர்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்கள் பலர், அல்லு அர்ஜுன் நடிப்பது போலவே செய்து காட்டி, அதனை வீடியோக்களாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது, அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், அல்லு அர்ஜுனைப் போலவே, தாடியை வருடி, நடித்துக் காட்டி அசத்தியுள்ளார் ஜடேஜா. இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.