நான் ரோகித்துக்கும், வார்னருக்கும் பந்துவீச ரொம்ப கஷ்டப்பட்டேன்ப்பா... - பாகிஸ்தான் வீரர் பளிச் டாக்

sports-cricket
By Nandhini Dec 23, 2021 10:15 AM GMT
Report

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பந்துவீச மிகவும் கஷ்டப்பட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து பாகிஸ்தான் பவுலர் சதாம் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இளம் ஆல்ரவுண்டரான சதாம் கான், கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 3 வகையான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 48 ஒருநாள் மற்றும் 64 டி-20 போட்டிகளில் சதாம் கான் விளையாடி இருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டும் வருகிறார்.

இந்நிலையில் சதாம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ரசிகர்கள் சதாம் கானிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதில், ‘நீங்கள் பந்துவீச சிரமப்பட்ட பேட்ஸ்மேன்கள் யார்?’ என்று, அதற்கு பதிலளித்த சதாம் தான், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் என்று பதில் அளித்துள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.