ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்து உலகில் மிகவும் பாராட்டப்படும் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வீரர்!
உலகிலேயே அதிகம் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டீனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்குப் பிறகு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 3வது இடம் என்றால், அதிகம் பாராட்டப்படும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4ம் இடத்தை பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி முதல் 2 இடத்தில் இருக்கிறார்கள்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனம் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான யூகவ் நிறுவனம் நடத்திய சர்வேயில் இது தெரிய வந்திருக்கிறது.
பலதுறைகளிலும் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகம் பாராட்டப்படும் ஆளுமையாகத் திகழ்ந்துள்ளார். ஒபாமாவுக்கு அடுத்ததாக பில் கேட்ஸும் அடுத்த இடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இருக்கிறார்கள்.
இப்பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 8ம் இடத்தில் உள்ளார். பிரபல பாலிவுட் ஸ்டார்களான ஷாரூக்கான் மற்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் 14 மற்றும் 15ம் இடத்தில் உள்ளனர்.