தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணியின் துணை கேப்டன் இவர்தானாம்?

sports-cricket
By Nandhini Dec 18, 2021 10:06 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து துணை கேப்டன் ரோகித் சா்மா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

அவருக்குப் பதிலாக இந்திய ‘ஏ’அணியின் கேப்டன் பிரியங்க் பாஞ்சல் பிரதான அணியில் இணைந்துள்ளார். ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டனாக எவரையும் பிசிசிஐ அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோகித் சர்மா இல்லாத நிலையில் டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலுடன் இணைந்து மயங்க் அகா்வால் இன்னிங்சை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணியின் துணை கேப்டன் இவர்தானாம்? | Sports Cricket

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணியின் துணை கேப்டன் இவர்தானாம்? | Sports Cricket