முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் மீண்டும் கைது - ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவுக்காக 74 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5000 ரன்கள் எடுத்து வரலாறு சாதனை படைத்துள்ளார்.
இவர் 42 ஒரு நாள் போட்டிகளில் ஆடி அசத்தியுள்ளார். இதன் பிறகு 15 ஆண்டுகளாக அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் டிவி திரைகளில் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.
செவன் நெட்வொர்க் வர்ணனைக் குழுவிலிருந்து ஸ்லேட்டர் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை காரணமாகக் கைது செய்யப்பட்டார்.
பிறகு, இவருக்கு மன ரீதியாகப் பாதிக்கப்பட்டதால் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, வீரர் ஸ்லேட்டருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பாதிலேயே நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி, ஸ்லேட்டர் வீடியோ இணைப்பு மூலம் மேன்லி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், ஸ்லேட்டர் செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி நேரத்தில் 66 குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், புகார்தாரருக்கு 18 தொலைப்பேசி அழைப்புகள் செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு மீறியதால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது