டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்; தென்னாப்பிரிக்காவிற்கு பறந்த இந்திய வீரர்கள் - வைரலாகும் புகைப்படம்
தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது.
உலககோப்பை டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியது.
இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து பி.சி.சி.ஐ. வௌியிட்ட புகைப்படத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் விமானத்தில் பயணிப்பது போல உள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள் -
All buckled up ✌?
— BCCI (@BCCI) December 16, 2021
South Africa bound ✈️??#TeamIndia #SAvIND pic.twitter.com/fCzyLzIW0s