ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி - நடந்தது என்ன?
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது.
இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடக்கும் இப்போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
அடிலெய்டில் நேற்று இரவு உணவகத்திற்கு சென்ற பேட் கம்மின்ஸ் கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால், ஆஷஸ் 2-வது டெஸ்ட்டில் பேட் கம்மின்ஸ் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அவர் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். பேட் கம்மின்ஸ் விலகியதையடுத்து ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.