‘என் குடும்பத்திற்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை... உடனே வாழ்த்தி விடுகிறேன்... ’ - ஸ்டெய்ன் வேதனை

sports-cricket
By Nandhini Dec 15, 2021 06:16 AM GMT
Report

ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையை பாராட்ட சற்றே தாமதமாக்கி விட்டார் டேல் ஸ்டெய்ன், உடனே நெட்டிசன்கள் ஈவு இரக்கமின்றி அவர் மீது பாய்ந்து வருகிறார்கள்.

இதனால், வேதனையுடன் பதில் அளித்துள்ளார் டேல் ஸ்டெய்ன்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நான் மன்னிப்புக் கேட்கிறேன், என் தாத்தா இறந்து விட்டார், அதனால் அவருடனும் என் குடும்பத்துடனும் இருந்தேன். நான் தாமதமாக வாழ்த்தினேன். அடுத்த முறை என் குடும்ப துன்ப நிகழ்வுகளை ஓரங்கட்டி விட்டு இனி முதலில் பாராட்டி விடுகிறேன் என்ன?” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் டேல் ஸ்டெய்ன்.

இந்த நெட்டிசன்களின் அராஜகம் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது என்றும், தன்னுடைய தகுதி தராதரம் என்னவென்பதை இவர்கள் யோசிப்பது கிடையாது என்று சில உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது ஒரு பிரபலத்தை கேலி, கிண்டல், விமர்சனம் செய்வதன் மூலம் தன்னிடம் இல்லாத ஒன்றை இட்டு நிரப்பிக் கொள்கின்றனர் என்று சோஷியல் மீடியா உளவியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.