டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வா?- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

sports-cricket
By Nandhini Dec 15, 2021 04:58 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடிவரும் நிலையில் ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரவீந்திர ஜடேஜா 33 வயதாகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 2,195 ரன்களை 33.76 என்ற சராசரியில் எடுத்திருக்கிறார். பந்து வீச்சில் 232 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார். இந்தியக் குழிப் பிட்ச்களின் தாதா பவுலர் ஜடேஜா என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அவர் திறமையானவர்.

டெஸ்ட் போட்டிகளில் 44 டெஸ்ட்களில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இடது கை பவுலர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியிருக்கிறார். ஜடேஜா தேவையான போது ரன்களையும் விக்கெட்டுகளையும் பெற்றுத்தரும் பயனுள்ள ஆல்ரவுண்டர். பீல்டிங்கில் எந்த வடிவத்திலும் அசத்துபவர் ஜடேஜா. நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் போது முன் கையில் அடிபட்டு வீங்கியது.

இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் உட்கார்ந்தார். இப்பிரச்சினையால் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா கிடையாது. ரசிகர்கள் இந்த ராக்-ஸ்டார் ஜடேஜாவை விரைவில் களத்தில் எதிர்பார்க்க அவரோ டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் இனி தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவார் போல. ஆனால் ஜடேஜா தரப்பில் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வா?- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Sports Cricket