மிடில் ஸ்டம்பில் பந்து பட்டும் இப்படி ஆயிடுச்சே... தலையில் கையை வைத்த கீப்பர் - வைரலாகும் வீடியோ
ஆஸ்ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஸ் லீக் தொடரில், ஆண்ட்ரே ரசுல் அதிர்ஷ்டவசமாக அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று, அவுஸ்திரேலியாவில் Big Bash League (BBL) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
அதன் படி இந்தாண்டிற்கான இந்த தொடர், கடந்த 5-ம் தேதி முதல் தொடங்கியது. அந்த வீடியோவில், Melbourne Stars அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசுல் 21 பந்தில் 42 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், இவர் ஆட்டத்தின் 14.6-வது பந்தை வீசிய, சுழற்பந்து வீச்சாளர் Tanveer Sangha பந்தை அடித்து ஆட முயற்சி செய்தார்.
ஆனால், பந்தானது அவரது பேட் மற்றும் கால்காப்பில் பட்டு, அப்படியே ஸ்டம்பில் பட்டது. ஆனால், ஸ்டம்பில் இருந்த பைஸ் கீழே விழாத காரணத்தினால், ரசுல் அவுட்டிலிருந்து தப்பினர். அப்போது ரசுல் 15 பந்தில் 33 ஓட்டங்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
That was a ROLLERCOASTER of an over for DreRuss #BBL11 pic.twitter.com/kobkADByEG
— KFC Big Bash League (@BBL) December 12, 2021
அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான் IBC Tamil
விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம் IBC Tamil