சீனியராக இருக்கலாம்.. அதுக்காக இனி அணியில் எடுப்பது சரி இல்லை - சபா கரீம்

sports-cricket
By Nandhini Dec 13, 2021 10:27 AM GMT
Report

இந்திய அணி டிசம்பர் 26ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இதற்கான ஒரு நாள் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஷிகர் தவானை மீண்டும் அணிக்குள் எடுத்து விடுவார்களோ என்று சிலருக்கு பீதி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம், தெளிவாக, ஷிகர் தவான் சீனியராக இருக்கலாம் இனியும் அவரைப் போய் அணியில் எடுத்தால் நிச்சயம் சரியாக வராது என்று தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார்.

டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 தொடா்களுக்கு ரோகித் சா்மாவும் கேப்டனாக இருக்கிறார்கள். இதில் டெஸ்ட் தொடருக்கான அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், தற்போது ஒருநாள் தொடருக்கான அணி தோவுக்கான பரிசீலனைகள் நடந்து வருகிறது. அதிரடி தொடக்க வீரரான ஷிகா் தவனுக்குரிய வாய்ப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூலையில் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து தொடரில் பங்கேற்றிருந்த வேளையில், இளம் வீரா்கள் அடங்கிய மற்றொரு அணிக்கு தலைமை தாங்கி இலங்கை சென்றாா் தவன்.

அங்கு ஒருநாள் தொடரையும் கைப்பற்றினாா். ஆனால், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் தவனின் பேட்டிங் சற்று கவலைக்குரியதாக இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க தொடா் எதிா்வரும் நிலையில், இந்த தொடரில் வரிசையாக 0, 12, 14, 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளார். ஆனால், மறுபுறம் இளம் வீரா்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயா் போன்றோா் விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது, இருவரும் தங்கள் முழூ திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு அதிகரித்து வருகின்றன. அதே வேளையில் தவனின் மோசமான பேட்டிங் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து சபா கரீம் கூறுகையில், “தவானை அணியில் எடுத்தாலும் ஆடும் 11 வீரர்களில் இவர் இருக்க முடியாது. ஏனெனில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் 3 வடிவங்களிலும் நிச்சயம் தொடக்கத்தில் இறங்குவார்கள். இந்நிலையில், தவானை அணியில் சேர்த்து அவரை ஆடும் 11 வீரர்களில் சேர்க்காமல் இருப்பது வேஸ்ட்தானே. ஆ.. ஊ..ன்னா இந்த லெஃப்ட் ரைட் காம்பினேஷன்னு சொல்லி இதுமாதிரி செலக்‌ஷன்ல ஏதாவது செஞ்சுருவாங்க. தவான் இந்த இந்திய அணிக்குள் நுழைவது கடினமே” என்றார்.