‘இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம்... கோலியின் வேகத்தை கண்டு எதிரணி சோகப்படும்...’ - கவுதம் கம்பீர்

sports-cricket
By Nandhini Dec 13, 2021 09:20 AM GMT
Report

இந்திய அணியின் கேப்டன் பொறுப்புகளிலிருந்து விராட் கோலி விலகினார். இந்நிலையில், வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறுவார் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் விராட்கோலியும் ஒருவராவார். இவர் இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.

உலகக்கோப்பை டி-20 தொடருடன் டி-20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட்கோலியை அதிரடியாக பி.சி.சி.ஐ. நீக்கியது.

இவருக்கு பதிலாக புதிய இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றனர்.

மேலும், #shamebcci என்ற ஹாஸ்டேக்கும் விராட் கோலி ரசிகர்களால் டுவிட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலி குறித்து முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது -

"கேப்டன் பதவியின் அழுத்தம் இனி இல்லாமல் விராட் கோலி வரும் போட்டிகளில் பயமில்லாத ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்துவார். விராட் கோலி எவ்வளவு ஆபத்தான பேட்ஸ்மேன் என்பது இனி எல்லோருக்கும் தெரியவரும்.

ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகி உள்ளார். இவர் மீது சுமத்தப்பட்ட இத்தனை வருட அழுத்தத்தை நிச்சயம் இது குறைக்கும் என்று நான் நம்புகிறேன்.

எந்த வடிவிலான தொடர்களாக இருந்தாலும் விராட் கோலி தனது பங்களிப்பை சிறப்பாகவும், சரியாகவும் செய்து இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பார். அதேபோல், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பாதுகாப்பாக இருக்கும்.

இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித். இந்திய அணியின் மற்ற கேப்டன்களை விட ரோகித், இந்திய அணிக்காக எதையோ ஒன்றை மிகச் சரியாக செய்ய இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.