வெறித்தனமாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் - ஹர்திக் பாண்டியா காலியா?

sports-cricket
By Nandhini Dec 13, 2021 08:16 AM GMT
Report

இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக இளம் வீரர்கள், விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் போட்டிகளில் அதகளப்படுத்தி வருகிறார்கள்.

ஹர்திக் பாண்டியாவின் கரியரைக் காலி செய்யக் காத்திருக்கும் மத்தியப் பிரதேச வீரர் வெங்கடேஷ் அய்யர் நேற்று சண்டிகர் அணிக்கு எதிராக 151 ரன்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப சரியான ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்திருக்கிறார். அவர்தான் வெங்கடேஷ் அய்யர். ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டியிலிருந்து விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சண்டிகர் பவுலர் ஜெகஜித் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மத்தியப் பிரதேச அணி 14வது ஓவரில் 56/4 என்று தடுமாறி வந்தது. அப்போது 6ம் நிலையில் இறங்கிய வெங்கடேஷ் அய்யர், முதலில் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவுடன் சேர்ந்து 122 ரன்கள் கூட்டணி அமைத்தார்.

ஸ்ரீவஸ்தவா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 80 பந்துகளில் 70 ரன் எடுத்து ரன் அவுட்டாக, கடைசியில் புனீத் தாதே, குமார் கார்த்திகேயா இறங்கி சிறு அதிரடி இன்னிங்ஸை ஆட மத்தியப் பிரதேச அணி 331/9 என்ற ஸ்கோரை எட்டியது.

வெங்கடேஷ் அய்யர் சிக்சர் மழை பொழிய கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் விளாசப்பட்டது. மத்திய பிரதேச அணி 331 ரன்கள் எடுத்தாலும் சண்டிகர் மகாவிரட்டலில் ஈடுபட்டது அந்த அணி, 13.2 ஓவர்களில் 77/3 என்று குறுக்கப்பட்டாலும், தொடக்க வீரரும் கேப்டனுமான மனன் வோரா 95 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 105 ரன்கள் விளாசினார்.

இவருடன் அன்கிட் கவுஷிக் நின்று 119 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 111 ரன்களை எடுக்க இருவரும் சேர்ந்து 166 ரன்கள் சேர்த்தார்கள்.

இதனால், இலக்கை விரட்டி ஒரு அதிர்ச்சித் தோல்வியை மத்தியப் பிரதேசத்துக்கு அளித்து வெங்கடேஷ் அய்யரின் அதிரடிக்கு பதிலடி கொடுக்க முனைந்தது, ஆனால் 326 ரன்கள் என்று வெகுநெருக்கமாக வந்து தோல்வி தழுவியது.

வெங்கடேஷ் அய்யர் 10 ஒவர்களில் 64 ரன்கள் விளாசப்பட்டார், ஆனால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அய்யர். குறிப்பாக குரீந்தர் சிங் என்ற அதிரடி வீரர் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த போது அவரை வெங்கடேஷ் அய்யர் வீழ்த்தியுள்ளார்.