கோலி விலகல் - உருக்கமாக பேசிய ரோஹித் ஷர்மா

sports-cricket
By Nandhini Dec 10, 2021 07:43 AM GMT
Report

கடந்த 8-ம் தேதி அன்று, இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

பிசிசிஐயின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், எதிர்ப்பும் தற்போது கிளம்பி உள்ளன. இந்நிலையில், ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் ரோஹித் ஷர்மா கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கோலி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது -

கோலி போன்ற ஒரு தரமான பேட்டர் இந்திய அணிக்கு மிக அவசியம். அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். டி-20 கிரிக்கெட்டில் 50+ சராசரி வைத்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது.

கோலியின் அனுபவம், கடினமான சூழலிலும் இந்திய அணிக்கு மிகவும் ஆதராவாக இருந்துள்ளது. அவர் இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.

இன்னும் அவர் இந்திய அணிக்கு தலைமையே. இவை அனைத்தையும் சேர்த்து பார்த்தால், அவரை நீங்கள் எளிதில் ஒதுக்கிவிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

பிசிசிஐ, விராட் கோலிக்கு அநீதி இழைத்து விட்டது என்று கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், ரோஹித் - கோலி இடையே நல்ல புரிதல் இருந்து இரு கேப்டன்களும் இந்திய அணியை டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

கோலி விலகல் - உருக்கமாக பேசிய ரோஹித் ஷர்மா | Sports Cricket