வந்தார், சிக்ஸர் அடித்தார்.. ரிப்பீட்டு.... - வரிசையாக சிக்ஸர் அடித்து அரங்கை அலற விட்ட இலங்கை வீரர்
லங்கா பிரீமியர் லீக் டி-20 தனியார் கிரிக்கெட் தொடரில் இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ வரிசையாக சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி-20 தனியார் கிரிக்கெட் தொடரில் இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ 5 சிக்சர்களை ஒரே ஓவரில் தொடர்ச்சியாக அடித்து அசத்தி இருக்கிறார்.
இதனால், ஐபிஎல் 2022-ல் அணி உரிமையாளர்களின் பார்வை இவர் பக்கம் திரும்ப பார்க்க வைத்துள்ளார். ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காக ஆடும் இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ கண்டி வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 சிக்சர்களை வரிசையாக அடித்து மைதானத்தை அலறவிட்டார்.
23 பந்துகளில் 53 ரன்கள் விளாசிய அவிஷ்கா பெர்னாண்டோ அதில் 7 சிக்சர்களை விளாசினார்.
டி-20 கிரிக்கெட்டில் 12 அதிரடி அரைசதங்களை அடித்துள்ள அவிஷ்கா பெர்னாண்டோவிற்கு வயது 23. இவர் இன்னும் ஐபிஎல் போட்டியில் ஆடியது கிடையாது. இவர் நிச்சயம் இந்த முறை நல்ல விலைக்கு ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What a show by Avishka Fernando tonight! ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) December 8, 2021
53 off 23 balls | 7 sixes ? #LPL2021 #එක්වජයගමු #ஒன்றாகவென்றிடுவோம் #EkwaJayagamu #WinTogether #TheFutureisHere pic.twitter.com/kD7kuD4nXE