ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் யார்? யார்ன்னு உங்களுக்கு தெரியுமா?

sports-cricket
By Nandhini Dec 06, 2021 08:23 AM GMT
Report

முழு விவரம் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலை தற்போது காண்போம்.

கபில்தேவ் (முதல் இடம்)

முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், முதல்முறையாக இந்தியாவிற்கு உலககோப்பையை வென்றுத்தந்தவருமான கபில்தேவ் இருக்கிறார். இவர் 1983ம் ஆண்டு 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கபில்தேவ் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமின்றி, சிறப்பான பேட்ஸ்மேனும் ஆவார். அந்தாண்டு கபில்தேவ் ஒரே இன்னிங்சில் 83 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

கபில்தேவ் ( 2வது இடம்)

ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கபில்தேவே இருக்கிறார். 1979ம் ஆண்டு 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தாண்டு அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரே போட்டியில் 121 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கும்ப்ளே ( 3-வது இடம் )

மூன்றாவது இடத்தில் இந்தியாவின் முன்னாள் கேப்டனும், முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளருமான கும்ப்ளே இருக்கிறார். இவர், மாயாஜால சுழற்பந்துவீச்சாளர். கும்ப்ளே 2004ம் ஆண்டு 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரே இன்னிங்சில் 141 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியது பதிவாகியுள்ளது. ஒரு போட்டியில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

அஸ்வின் ( 4-வது இடம்)

4-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். இவர் 2016ம் ஆண்டு 12 போட்டிகளில் ஆடி, 72 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அந்தாண்டு அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு போட்டியில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஹர்பஜன்சிங் ( 5-வது இடம்)

5-வது இடத்தில் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் உள்ளார். இவர் 2002ம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 63 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தாண்டில் அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஹர்பஜன்சிங் ( 6-வது இடம்)

6-வது இடத்தில் ஹர்பஜன்சிங்கே இருக்கிறார். இவர் 2008ம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஹர்பஜன்சில் 63 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தாண்டில் அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 102 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 153 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அஸ்வின் ( 7-வது இடம்)

7-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். இவர், 2015ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 62 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தாண்டு அவர் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

ஹர்பஜன்சிங் : ( 8-வது இடம்)

8-வது இடத்தில் ஹர்பஜன்சிங் உள்ளார். இவர், 2001ம் ஆண்டு, 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கும்ப்ளே : ( 9-வது இடம்)

9-வது இடத்தில் கும்ப்ளே உள்ளார். இவர், 2006ம் ஆண்டு 12 டெஸ்ட் போட்டிளில் ஆடிய கும்ப்ளே 57 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தாண்டு ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அஸ்வின் : ( 10-வது இடம்)

10-வது இடத்தில் அஸ்வின் உள்ளார். இவர் 2017ம் ஆண்டு அஸ்வின் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 56 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் அந்தாண்டு அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இவர்கள் மட்டுமின்றி

ஜடேஜா 2017ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், கும்ப்ளே 1999ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், மன்கட் 1952ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும், 1976ம் ஆண்டு சந்திரசேகர் 11 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும், அஸ்வின் நடப்பாண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளையும், ஜாகிர்கான் 2002ம் ஆண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் யார்? யார்ன்னு உங்களுக்கு தெரியுமா? | Sports Cricket