‘விருத்திமான் சகா, ரகானேவை டீமிலிருந்து தூக்கிவிடுங்கள்..’ - டுவிட்டரில் தெறிக்க விடும் நெட்டிசன்கள்

sports-cricket
By Nandhini Nov 26, 2021 10:46 AM GMT
Report

விருத்திமான் சகா நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் 12 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதனையடுத்து, இவரையும், ரகானேவையும் நீக்குமாறு நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரிஷப் பண்ட் இல்லாததால் கே.எஸ். பரத் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்குமாறு பரிந்துரைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதே போல் ‘பங்களிப்பு’ செய்யும் ரகானேவை தூக்கி விட வேண்டும், கோலி உள்ளே வந்த பிறகு ரகானே வெளியேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். புஜாராவையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி வருகின்றார்கள்.அந்த அணி சற்றுமுன் வரை விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்திருக்கிறது. வில் யங் 70 ரன்களுடனும் டாம் லேதம் 42 ரன்களுடனும் ஆடி வருகிறார்கள்.