‘இது ஆரம்பம்தான் நண்பா...‘ - ஷ்ரேயஸ் அய்யரை பாராட்டிய ரிக்கி பாண்டிங் - குவியும் வாழ்த்துக்கள்

sports-cricket
By Nandhini Nov 26, 2021 10:24 AM GMT
Report

இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘டெஸ்ட் கரியருக்கான அபாரத் தொடக்கம்’ என்று ஷ்ரேயஸ் அய்யர் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் அறிமுக வீரர் ஷ்ரேயஸ் அய்யர் சதம் விளாசி சாதனை படைத்தார். இந்தியாவுக்காக 16வது வீரராக அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசி இருக்கிறார். இதனையடுத்து பலர் ஷ்ரேயஸ் அய்யரை பாராட்டி வருகிறார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் தனது டுவிட்டர் பக்கத்தில், “கடந்த சில ஆண்டுகளாக நீ போட்ட கடின உழைப்பு உனக்கு தகுதியானதைப் பெற்றுத்தந்துள்ளது, இது வெறும் ஆரம்பம்தான் நண்பா, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இந்திய டி-20 அணி கேப்டன் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டெஸ்ட் கரியருக்கான அபாரத் தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, ஷ்ரேயஸ் அய்யர் இந்திய டெஸ்ட் அணிக்காக முதல் டெஸ்ட்டிலேயே சதம் எடுத்த 16-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

ஷ்ரேயஸ் அய்யரைப் பாராட்டி வெளியான டுவிட்டுகள் -