அஸ்வின் , ஷ்ரேயஸ் அய்யர் உட்பட இவர்களையும் சேர்த்து விடுவித்த டெல்லி கேப்பிடல்ஸ் - நடப்பது என்ன?

sports-cricket
By Nandhini Nov 26, 2021 04:52 AM GMT
Report

ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியிலிருந்தே விடுவிக்கப்பட்டார். பின்னர், டெல்லி கேப்பிடல்ஸ் வந்தார். சிறப்பாகத்தான் பந்து வீசுகிறார். இப்போது டி20 உலகக்கோப்பை, நியூசிலாந்து தொடர் இரண்டிலும் விளையாடி அசத்தியுள்ளார். ஆனால், அவரை டெல்லி கேப்பிடல்ஸ் விடுவித்துவிட்டது.

ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலம் நடக்க உள்ளது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஷ்ரேயஸ் அய்யரையும் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினையும் அந்த அணி விடுவித்திருக்கிறது. இதனையடுத்து இருவரும் மீண்டும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாறாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட்- ஐ தக்கவைத்துள்ளது.

அக்சர் படேல், பிரிதிவி ஷா, ஆன்ரிச் நார்ட்யே ஆகியோரும் டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், கேகிசோ, ரபாடா, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஏலத்தில் போட்டியிட வேண்டி இருக்கும். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட-ஐ கேப்டனாக தக்க வைக்க ஷ்ரேயஸ் அய்யர் தற்போது 2 புதிய அணிகள் உள்ளே வர மொத்தம் 5 அணிகள் புதிய கேப்டனை தேடிக்கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பை அய்யர் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2018 தொடரின் மத்தியிலேயே கவுதம் கம்பீரிடமிருந்து ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சியைப் பெற்றார். அடுத்த ஆண்டே அய்யர் கேப்டனாக்கப்பட அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஒருமுறை டெல்லி அணியை இறுதிச் சுற்றுக்கும் இட்டுச் சென்றார் ஷ்ரேயஸ் அய்யர். ஆனால் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் 2021 தொடரிலிருந்து ஷ்ரேயஸ் அய்யர் விலகியதுதான், தற்போது அவருக்கு இன்று கேப்டன்சி பறிபோகக் காரணம். ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியிலிருந்தே விடுவிக்கப்பட்ட பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் வந்தார்.

சிறப்பாகத்தான் பந்து வீசுகிறார், இப்போது டி20 உலகக்கோப்பை, நியூசிலாந்து தொடர் இரண்டிலும் அசத்தினார், ஆனால் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சூரியகுமார் யாதவ்வை ரிலீஸ் செய்து பிறகு ஏலத்தில் புதிதாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைன், ஆந்த்ரே ரசல் ஆகிய மே.இ.தீவுகள் வீரர்களை தக்க வைத்துள்ளது வருண் சக்ரவர்த்தியும் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அஸ்வின் , ஷ்ரேயஸ் அய்யர் உட்பட இவர்களையும் சேர்த்து விடுவித்த டெல்லி கேப்பிடல்ஸ் - நடப்பது என்ன? | Sports Cricket