அயல்நாட்டு டி-20 கிரிக்கெட் லீகில் கால்பதிக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் யுஏஇ டி20 லீகில் ஒரு அணியை வாங்கி களமிறக்க இருக்கிறது.

ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் யுஏஇ டி20 லீகில் ஒரு அணியை வாங்கி களமிறக்க இருக்கிறது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் புதியதோர் டி20 லீக் தனியார் கிரிக்கெட்டை தொடங்க விருப்பதில் ரிலையன்ஸ் ஓர் அணியை வாங்கி முதன் முதலாக அயல்நாட்டு லீக் ஒன்றில் கால்பதிக்க உள்ளது.

இந்த கிரிக்கெட் வர்த்தகத்தில் இப்போது ரிலையன்ஸ் வசம் 2 அணிகள் இருக்கின்றன. இதோடு ஸ்பான்சர்ஷிப், கன்சல்டன்சி, ஒளிபரப்பு, மற்றும் திறன் மேலாண்மை ஆகிய கிரிக்கெட் தொடர்பான வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சிஎஸ்கேவுடன் சேர்ந்து ஒரு பெரிய பிராண்டாக உருப்பெற்றிருக்கிறது.

யுஏஇ டி20 லீகில் ரிலையன்ஸின் நுழைவு அந்த லீகுக்கும், யுஏஇ கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரிய வளங்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மும்பை இந்தியன்ஸின் சக உரிமையாளர் நிதா அம்பானி கூறுகையில், “பெரும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயமற்ற கிரிக்கெட் ரகத்தை புதிய புவியியல் இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்.

இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. எங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இதயமாக மும்பை இந்தியன்ஸ் இருக்கும் பட்சத்தில் யுஏஇ சந்தையும் பெரிய ஈர்ப்பாக இருக்கிறது.இதன் மூலம் சர்வதேச அளவில் இளம் திறமைகளை வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

முதலில் சில தொடர்களில் யுஏஇ டி20 லீகில் 6 அணிகள் மோதும். 34 போட்டிகள் நடைபெறும். இந்த லீகில் பெரிய வீரர்கள் பலர் ஆடுகின்றனர். யுஏஇ டி20 லீகில் ரிலையன்ஸ் அணி இணைவதன் மூலம் இன்னும் சிலபல அபார அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்