நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - அறிமுகமாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்

sports-cricket
By Nandhini Nov 24, 2021 10:03 AM GMT
Report

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவார் என்று இந்திய அணி கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை காலை தொடங்க இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ரஹானே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ரோகித் ஷர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கும் பணிச்சுமை கருதி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் வழக்கமான டெஸ்ட் அணியில் இடம்பெறும் 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் கிடையாது.

அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக இருக்கிறார்.