இந்திய ‘ஏ’ அணி - ஏமாற்றமடைந்த பவுலர்கள்

sports-cricket
By Nandhini Nov 24, 2021 06:34 AM GMT
Report

இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள்) புளோம் பாண்டீனில் நேற்று தொடங்கி இருக்கிறது.

இப்போட்டியில், உள்ளூர் ஆடுகளத்தில் அபாரமாக பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்திருக்கிறது. கேப்டன் பீட்டர் மலான் (157 ரன், நாட்-அவுட்), டோனி டி ஜோர்ஸி (117 ரன்) சதம் அடித்தார்கள்.

இப்போட்டி, முதல் நாள் ஆட்டம் நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட இந்திய பவுலர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

இந்திய ‘ஏ’ அணி - ஏமாற்றமடைந்த பவுலர்கள் | Sports Cricket