திக்...திக்.. திக்.. நிமிடம்... - கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அசத்திய ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
சையத் முஸ்தாக் அலி தொடரின் இறுதி போட்டியில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த 4ம் தேதி, உள்ளூர் டி-20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடர் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் இத்தொடர் நடைபெற்ற நிலையில், தொடரின் அரையிறுதி சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், கர்நாடகா அணியும் இறுதி போட்டிக்கு தகுதியானது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இறுதிப் போட்டி இன்று நடந்தது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலக்கை துரத்தி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர்களான ஜெகதீஷன் 41 ரன்களும், ஹரி நிஷாந்த் 23 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய மிடில் ஆர்டர் வீரர்கள் சற்று சொதப்பியதால் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது.
அப்போது, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் சாய் கிஷோர் முதல் நான்கு பந்தில் 8 ரன்கள் எடுத்து கொடுத்தன் மூலம் கடைசி ஒரு பந்திற்கு 5 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஷாருக்கான் மிரட்டல் சிக்ஸர் விளாசி தமிழ்நாடு அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
தற்போது அவர் விளாசிய சிக்ஸர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
Shahrukh Khan you beauteeee????A perfect last ball thriller finish to retain the #SyedMushtaqAliTrophy . Just something with these #yellove jerseys. 1st @ChennaiIPL then, @cricketcomau now, @TNCACricket ??? pic.twitter.com/S9vpJ5Uevn
— Shankar Krishna (@shankykohli18) November 22, 2021