கோபத்தில் பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரருக்கு அபராதம்

By Nandhini Nov 22, 2021 05:15 AM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இரண்டு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதனையடுத்து, டாக்காவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது.

இப்போட்டியின் போது அந்த வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன் அபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை எறிந்து காலில் காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய பந்தில் அபிப் சிக்சர் அடித்தார். இதனால், கோபம் அடைந்த அப்ரிடி இவ்வாறு செய்து நடவடிக்கையில் சிக்கி உள்ளார். 

கோபத்தில் பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் | Sports Cricket