சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 இறுதிப்போட்டி - தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இன்று மோதல்
சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோத உள்ளன. அரையிறுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்த முதல் அரையிறுதியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் விதர்பா அணியை மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளும் தலா 2 முறை சையத் முஸ்தாக் அலி கோப்பையை கைப்பற்றியுள்ளன. கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் நான்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றிருக்கிறது.
2019ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவை தோற்கடித்தது. இருப்பினும் நடப்பு சாம்பியனாக வலம் வரும் தமிழ்நாடு அணி 3வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.