இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் டயட்டில் உணவு முறை மாற்றம் - வெளியான தகவல்

By Nandhini Nov 21, 2021 09:41 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் டயட் மற்றும் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. இதை தொடர்ந்தே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கடுமையான உணவுத் கட்டுபாடுகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன்படி பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிட அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரியவந்துள்ளது. அதே சமயம் ஹலால் இறைச்சியை மட்டும் சாப்பிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் நல்ல ஆரோக்கியமாகவும், கட்டுகோப்பாகவும் உடலை வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.