பக்கா பிளான் - இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய ஜாஹிர் கான்

sports-cricket
By Nandhini Nov 21, 2021 06:43 AM GMT
Report

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நடந்தது.

இப்போட்டியில், 18வது ஓவரின் முதல் இரண்டு பந்திலும் ரிஷப் பண்ட் இரண்டு சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் 17.2 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது -

இந்திய அணி 3வது பேட்ஸ்மேனாக வெங்கடேஷ் ஐயரை களமிறக்கியது பார்த்தால் இந்திய அணி எதிர்வரும் உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்துக்கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறது என்பது நன்றாக தெரிகிறது.

எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்திய அணி செயல்படுவது வரவேற்கக் கூடியது. ஐசிசியால் நடத்தப்படும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் தவித்து வருவதற்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்படாததுதான் முக்கிய காரணமாக இதுவரை இருந்து வருகிறது,

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும் மிடில் ஆர்டர் சொதப்புவதால் இந்திய அணி ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் கோப்பையை வெல்ல முடியவில்லை, இதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

பக்கா பிளான் - இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய ஜாஹிர் கான் | Sports Cricket