கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இன்று இந்தியா - நியூசிலாந்து அணி மோதல்

Nandhini
in கிரிக்கெட்Report this article
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இப்போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை ஏழு சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டங்களில் ஆடி அதில் 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.