டி வில்லியர்ஸ் ஓய்வை கிண்டலடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் - ரசிகர்கள் கொந்தளிப்பு

sports-cricket
By Nandhini Nov 21, 2021 04:24 AM GMT
Report

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸின் ஓய்வை வேகப்பந்துவீச்சாளர் கிண்டல் செய்துள்ளதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கியவர் ஏ.பி.டிவில்லியர்ஸ். இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு பெறுவதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.

இவரின் அறிவிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் டிவில்லியர்ஸை கிண்டலடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பர்விந்தர் அவானா. இவர் டி வில்லியர்ஸ் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 2013ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவிலியர்ஸ் விளையாடியபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா விளையாடினார்.

அப்போது நடைபெற்ற ஒரு போட்டியில் ஏபி டிவிலியர்ஸை பர்விந்தர் கிளின் போல்ட் ஆக்கியிருந்தார். அந்த வீடியோவை பதிவிட்டு "கிரிக்கெட்டிற்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பர்விந்தருக்கு சமூகவலைத்தளத்தில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.