“இந்தியாவில் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் அபாரமானது” - ஓய்வை பெற்ற டிவில்லியர்ஸ் உருக்கம்

sports-cricket
By Nandhini Nov 19, 2021 10:44 AM GMT
Report

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது. நான் ஒவ்வொரு போட்டியையைும் அனுபவித்து விளையாடினேன். இப்போது வயது 37 ஆகிறது. இப்போது எந்தச் சுடரும் முன்புபோல் பிரகாசமாக எறிவதில்லை. இந்த நிதர்சனத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் இன்று என்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறேன்.

இந்த நெடுந்தூர பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள்". "இந்த கிரிக்கெட் பயணத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் எனக்கு கிடைத்த அன்பும், ஆதரவும் அபாரமானது. கிரிக்கெட் என்னுடன் எப்போதும் அன்புடன் இருந்திருக்கிறது. அது நான் தென்னாப்பிரிக்காவுக்காகவும், ஆர்சிபிக்காகவும் விளையாடும்போதும் அது குறையவே இல்லை.

அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என் கிரிக்கெட் வாழ்க்கைகாக என்னுடைய குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். இனி என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்தில் அவருக்கு முன்னுறிமை கொடுக்கும் வகையில் இருக்கும்" என்றார். 

“இந்தியாவில் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் அபாரமானது” - ஓய்வை பெற்ற டிவில்லியர்ஸ் உருக்கம் | Sports Cricket