அஸ்வின் மோசமாக பந்துவீசி நான் பார்த்ததே கிடையாது - நியூசிலாந்து வீரர் கருத்து
என் வாழ்நாளில் அஸ்வின் இவ்வளவு மோசமாக பந்துவீசி பார்த்ததே கிடையாது என்று நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், அஸ்வின் குறித்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் கருத்து கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், அஸ்வின் ஒரு தந்திரமான பந்து வீச்சாளர். அவர் தனது லைன் மற்றும் லென்த் மீது அபார கட்டுப்பாட்டை பெற்றிருக்கிறார். அவர் மோசமான பந்துகளை வீச மாட்டார். எனது வாழ்நாளில் எனக்கு அவர் மோசமாக பந்துவீசி பார்த்தது கிடையாது என்றார்.