பெண் கொடுத்த பாலியல் புகார் : கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் டிம் பெய்ன்

sports-cricket
By Nandhini Nov 19, 2021 07:47 AM GMT
Report

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளதையடுத்து, கேப்டன் பதவியிலிருந்து டிம் பெயின் விலகி இருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடன் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். இந்த குற்றத்திற்காக ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அப்போது, அந்த அணிக்கு டிம் பெயினை கேப்டனாக நியமித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

அப்போது, பெண் ஒருவர் டிம் பெய்ன் தனக்கு ஆபாச புகைப்படங்களையும், மெஸேஜ்களையும் அனுப்பியதாக புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தில் டிம் பெய்ன் மீது குற்றமில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது மீண்டும் பூதாரமாக வெடித்துள்ளது. எனவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெய்ன் விலகி இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

"இது நம்ப முடியாத முடிவு. ஆனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவு. நடந்த சம்பவம் குறித்து அப்போது நான் வருந்தினேன். இன்றும் வருந்துகிறேன். எனது குடும்பம் என்னை மன்னித்துவிட்டனர். இந்தச் சம்பவம் பொது வெளியில் பெரிய பேசு பொருளாகும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு அறிந்தேன்.

என் மனைவி, குடும்பத்தினர் மற்றும் இதர தரப்பினருக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். இதனால், நமது ஆஸ்திரேலிய அணியின் நற்பெயருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவு. ஆஷஸ் தொடருக்கு முன்னால், பெரிய சர்ச்சையை உருவாக்க நான் விரும்பவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பெண் கொடுத்த பாலியல் புகார் : கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் டிம் பெய்ன் | Sports Cricket