விறுவிறுப்புடன் 2வது டி20 ஆட்டம் - இன்று நியூசிலாந்து - இந்தியா மோதல்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது.
ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்க இருக்கிறது. பந்து வீச்சாளர்களின் வரிசையில் சில மாற்றங்களை இந்திய அணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்ற அழுத்தத்தில் களமிறங்க இருக்கிறது.
முதல் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த ஆஸ்டிலுக்கு மாற்றாக இஷ் சோதியை அந்த அணி இன்றைய ஆட்டத்தில் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.