உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்கள் - கோலாகல கொண்டாட்டம்

sports-cricket
By Nandhini Nov 19, 2021 06:06 AM GMT
Report

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

20 ஓவர் உலககோப்பை போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியினர் தாயகம் திரும்பினார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் கோப்பையுடன் உற்சாகத்தில் இருக்கும் புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ சி சி ) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.