சச்சின், டிராவிட்டின் பெயரை சூட்டிக்கொண்ட நியூசிலாந்து வீரர் - யார் அவர்?

sports-cricket
By Nandhini Nov 18, 2021 09:46 AM GMT
Report

ரச்சினின் தந்தை இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர். இதனால், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் நினைவாக அப்பெயரை சூட்டியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக, நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோருக்குப் பதிலாக மாா்க் சாப்மேன், டாட் ஆஸ்டில், ரச்சின் ரவீந்திரா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் இணைந்தார்கள்.

இதில், 1 பவுண்டரி உடன் 7 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் ஆட்டமிருந்தார் ரச்சின் ரவீந்திரா. ஆனால், இந்திய ரசிகர்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். ஏனென்றால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் நியூசிலாந்துக்காக விளையாடுவது புதிது கிடையாது. இஷ் சோதி, ஜீதன் படேல், ஜீத் ராவல் போன்றவர்கள் அவ்வரிசையில் இருக்கிறார்கள். நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இந்தியாவை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்தவர் ரச்சின் ரவீந்திரா. ரச்சினின் தந்தை ரவி இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர்.

இதனால், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நினைவாக அப்பெயரை சூட்டியுள்ளார். 2016ம் ஆண்டு மற்றம் 2018ம் ஆண்டுகளில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா விளையாடினார்.

பிறகு, கடந்த செப்டம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டராக அறிமுகமானார். இதுவரை இவர் 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இரக்கிறார்.

லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சிறு சிறுவயதிலிருந்தே சச்சின் டெண்டுல்கரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடி வருவதாக முன்பு ஒரு முறை பேட்டியில் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின், டிராவிட்டின் பெயரை சூட்டிக்கொண்ட நியூசிலாந்து வீரர் - யார் அவர்? | Sports Cricket

சச்சின், டிராவிட்டின் பெயரை சூட்டிக்கொண்ட நியூசிலாந்து வீரர் - யார் அவர்? | Sports Cricket