இவருக்கு ஏண்டா டீம்ல இடம் தரல... இந்திய அணி மீது கொந்தளிக்கும் ரசிகர்கள்

sports-cricket
By Nandhini Nov 18, 2021 07:25 AM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியில் சாஹலுக்கு இடம் கொடுக்காததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். அதே போல் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சிராஜ் போன்ற வீரர்களும் ஆடும் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணமே இல்லாமல் சாஹல் போன்ற சிறந்த வீரரை தொடர்ந்து புறக்கணிப்பது சரியான முறை கிடையாது என்று ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.