ஹர்திக் பாண்டியாவிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல் - நடந்தது என்ன?
துபாயிலிருந்து திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை, மும்பை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரிடம் இரண்டு வாட்ச் இருந்தது. அதில் ஒன்று தங்க வாட்ச். இரண்டும் புதிய வாட்ச்சாகும். அதை ஒன்றை கையில் கட்டியிருந்தார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்தது.
இதன் இரண்டின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இந்தளவு விலைமதிப்புள்ள வாட்சுகளை வாங்கியதற்கான ரசீதை சுங்கத்துறையினர் கேட்டனர். ஆனால், ஹர்திக் பாண்டியாவிடம் இதற்கான ரசீது இல்லை.
இதனையடுத்து, அவரின் வாட்ச் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ரசீது இல்லாமல் அதிக மதிப்புள்ள தங்கம் எடுத்து வந்த காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.