டி20 உலகக் கோப்பைக்கான மதிப்பு மிக்க அணியை வெளியிட்ட ஐசிசி : அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து ஐசிசி வெளியிட்ட மதிப்புமிக்க அணியில் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை.இதனால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஐசிசி சார்பில் மிகவும் மதிப்புமிக்க 20 ஓவர் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணிக்கு பாபர் ஆசம் கேப்டனாக இருக்கிறார். டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாகவும் அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி ஆகியோரும் இடம் பிடித்திருக்கிறார்கள்.
மேலும், ஆடம் ஸாம்பா, ஹாசில்வுட், ட்ரெண்ட் போல்ட், நார்ட்ஜே மற்றம் 12வது வீரராக ஷாகீன் அப்ரிடி ஆகியோர் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார். ஆசிய நாடுகளிலிருந்து 4 வீரர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.