ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்து சொன்ன சச்சின் - வைரல் பதிவு

sports-cricket
By Nandhini Nov 15, 2021 06:54 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவுற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தி இருக்கிறது. இத்தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் டேவிட் வார்னர் 289 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இதற்காக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ‘டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சிறப்பாக அமைக்க கேன் சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இருப்பினும், மார்ஷ் & வார்னர் இடையேயான பார்ட்னர்ஷிப் ஆஸியின் ஆட்டத்தை சீர் செய்தது. மார்ஷ் தனது இன்னிங்ஸை 1 பந்தில் தொடங்கிய விதம் #NZ முழுவதுமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

kane played a special innings to set up the T20worldcupfinal perfectly.

However, the partnership between Marsh & Warner sealed the game for the Aussies. The way Marsh began his innings from ball 1 took #NZ completely by surprise. Congratulations on wining the T20world cup

ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்து சொன்ன சச்சின் - வைரல் பதிவு | Sports Cricket