அசத்தலான வெற்றி… ஷூவில் பீர் ஊத்தி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் - வீடியோ வைரல்

sports-cricket
By Nandhini Nov 15, 2021 05:04 AM GMT
Report

ஐசிசி டி-20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊத்தி குடித்து கோலாகலாமாக கொண்டாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது. ஆஸ்திரேலிய அணி இறுதியாக 18.5 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக ஐசிசி டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்நிலையில், வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டிரஸ்ஸிங் ரூமில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஆஸ்திரேலிய வீரர் வேட் தனது ஷூவை எடுத்து அதில் பீர் ஊற்றி குடித்ததைக் காணலாம். அவரைத் தொடர்ந்து, ஸ்டோனிஸ் அதே ஷூவை எடுத்துக்கொண்டு பீர் குடித்ததையும் நாம் காணலாம். இந்த வீடியோவை வெறும் 20 நிமிடங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.