துபாய் ஆடுகளத்தில் நிலவும் சர்ச்சை - ஏன் இரண்டாவதாக பேட் செய்யும் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது?
நடப்பு டி-20 உலகக் கோப்பையில் 13 போட்டிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருக்கின்றன. அதில் இரண்டாவதாக பேட் செய்து இலக்கை விரட்டிய அணிகள் தான் தொடரை வென்றிருக்கிறது.
இந்நிலையில், துபாய் ஆடுகளம் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. டாஸ் வெல்லும் அணி தான் போட்டியை வெல்கிறது. ஐசிசி இது மாதிரியான ஆடுகளங்களில் முக்கிய தொடர்களை நடத்தக் கூடாது. டாஸ் வெல்கின்ற அணிக்கே கோப்பை, தொடரில் சவால் மிகுந்த போட்டி என்பதே இல்லை.
இந்த தொடரை நடத்துவதற்கு நடத்தாமல் இருக்கலாம் என அது நீண்டு கொண்டு போகிறது. துபாயில் நடைபெற்று முடிந்துள்ள நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரின் 13 போட்டிகளிலும் 2வதாக பேட் செய்யும் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அது அரையிறுதி மற்றும் இறுதி போட்டியும் இதில் அடங்கி இருக்கிறது. துபாய் மைதானத்தில் 75 சர்வதேச டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
அதில் முதலில் பேட் செய்யும் அணி 35 போட்டிகளில் வென்றிருக்கிறது. இரண்டாவதாக பேட் செய்யும் அணி 39 முறை வென்றிருக்கிறது. இது தவிர தற்போது நிலவுகின்ற பனிப்பொழிவும் இரண்டாவதாக பேட் செய்கின்ற அணிக்கு கைகொடுத்து வருகின்றது. இது தான் இரண்டாவதாக பேட் செய்யும் அணி வெல்ல காரணம் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது.