நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : கோலிக்கு ஓய்வு - அதிகார அறிவிப்பு

sports-cricket
By Nandhini Nov 12, 2021 08:09 AM GMT
Report

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்தை இந்தியா இறந்தது. இதன் பிறகு, இந்திய அணியானது நியூசிலாந்துடன் 3 டி20 போட்டிகளிலும் நவம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது.

இதனையடுத்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும், 2வது டெஸ்ட் போட்டியில் கோலியே கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் துணை கேப்டன் புஜாரா, ராகுல், மயங்க், கில், ஸ்ரேயாஸ் ஐயர், சஹா, கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த், உமேஷ், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதே நிலையில், ரோஹித் சர்மா,ரிஷ்ப் பந்த் ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.