'ஒரு போர் வீரனைப்போல களத்தில் வந்து இறங்கினார்' - அரையிறுதிக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரிஸ்வான்

sports-cricket
By Nandhini Nov 12, 2021 04:21 AM GMT
Report

ஆஸ்திரேலியாவுடனான நேற்றைய அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்.

ஆனால், அவர் நேற்றைய ஆட்டத்துக்கு முன்தினம் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேத்யூ ஹைடன் கூறுகையில், அவர் எப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்துகொள்வார் என்று பலர் சந்தேகப்பட்டனர். நுரையீரல் பிரச்சினை காரணமாக ரிஸ்வான் இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால், மறுநாள் ஒரு போர் வீரன் போல களத்திற்கு வந்து இறங்கினார். அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது. 'உண்மையில் இது ஒரு முரண்பாடு தான். என் இதயம் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்காகத்தான் துடிக்கும். ஆனால், நான் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்புகிறேன  என்றார்.