டி20 உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

sports-cricket
By Nandhini Nov 10, 2021 05:07 AM GMT
Report

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில், குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்-2 பிரிவிலிருந்து பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன.

அபுதாபியில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. 2010ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணி, மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

அதேசமயம், 2007, 2016ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இந்த முறை இறுதி சுற்றுக்குள் நுழைய கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றன. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து அணி 13 முறையும், நியூசிலாந்து அணி 7 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

டி20 உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டி - இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல் | Sports Cricket