கிரிக்கெட் உலகில் யாரும் படைத்திடாத சாதனை - வச்சு விளாசிய இந்திய பவுலர்

sports-cricket
By Nandhini Nov 09, 2021 10:45 AM GMT
Report

பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த டி20 கிரிக்கெட்டில் அக்‌ஷய் கர்னேவார் என்ற இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வீரர், வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி, இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். மணிப்பூர் அணிக்கு எதிராக இந்த வரலாற்று சாதனையை அவர் படைத்திருக்கிறார். டி20 கிரிக்கெட் உலகில் எந்தவொரு பவுலரும் படைத்திடாத சாதனை இவர் படைத்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டக் அலி டிராபி தொடரில் விதார்பா அணிக்காக விளையாடி வருகிறார். சுழற்பந்து வீச்சாளரான இவர் 2 கைகளிலும் பந்து வீசக் கூடிய Ambidextrous Bowler. இந்தியாவில் இந்த வகையில் பந்து வீசும் முதல் பவுலர் இவர்தான். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வகை பவுலர்கள் பரிசோதனை முயற்சியாக பந்து வீசி வருகிறார்கள்.

29 வயதான அவர் நடப்பு சையத் முஷ்டக் அலி தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மொத்தம் 44 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இன்று காலை சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.