ஆப்கானிஸ்தான் அணிக்குத் திரும்பிய முக்கிய வீரர் - பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
sports-cricket
By Nandhini
2021ம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால், ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.
இதற்கிடையே, கடந்த 2 போட்டிகளில் ஆடாத ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான முஜீப் உர் ரஹ்மான் அணிக்குத் திரும்பி இருக்கிறார். இது அந்த அணிக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
