இவர்தான் கே.எல் ராகுலின் கேர்ல் ப்ரண்ட்டா? இன்ஸ்டாவில் போட்ட புகைப்படம் வைரல்
நேற்று டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் லீக் போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதிக் கொண்டன. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 6.3 ஓவர்களில் 89/2 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
கே.எல்.ராகுல் இப்போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததால்தான் இந்தியாவால் 6.3 ஓவர்களில் வெற்றி பெற முடிந்தது. அதாவது நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்திலும், அடுத்து இந்தியா நமீபியாவை தோற்கடிக்கும் பட்சத்திலும் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.
இதனால், கே.எல்.ராகுலின் நேற்றைய ஆட்டத்தை ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அதிகமாக பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கே.எல்.ராகுல், அதில், “ஹேப்பி பர்த்டே மை லைவ்” என்று பதிவிட்டுள்ளார். அவரது கேர்ல் ப்ரண்ட் ஆதியாசெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.