இந்திய அணி நிர்வாகம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் : விளாசித் தள்ளிய சோப்ரா
இந்திய அணி தேர்வு குறித்து ஆகாஷ் சோப்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
இங்கிலாந்து அணியை நன்கு பாருங்கள். அவர்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களது மிகச்சரியான அணித் தேர்வுதான் முக்கிய காரணம். நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட், தி ஹன்ட்ரட் போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியவர்களை அணியில் சேர்த்துள்ளனர்.
டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு உலகக் கோப்பை அணியில் அவர்கள் இடம்கொடுக்கப்படவில்லை. ஜோ ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள். டெஸ்டில் அவரது ஆட்டம் பிரமிக்க வைத்துள்ளது.
இருப்பினும், அவருக்கு அணியில் இடம் கொடுக்கவே இல்லை. அவர்களது அணித் தேர்வு அந்தளவுக்கு சிறப்பானதாக உள்ளது. இதே ஜோ ரூட் இந்தியாவுக்காக டெஸ்டில் அதிக ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருந்தார். அவர் கேப்டனாக கூட நியமிக்கப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு நமது அணித் தேர்வு உள்ளது. டேவிட் மலான் அதிகமாக டெஸ்ட் விளையாடியது கிடையாது.
அடில் ரஷீத் போன்றவர்களும்தான். இருப்பினும், அவர்களுக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது. யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நுட்பம் அவர்களுக்கு தெரிந்துள்ளது.
இந்திய அணி நிர்வாகம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அணியில், டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டால் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கிறது. ஒருநாள் அணியில் சிறப்பாக செயல்பட்டால் டெஸ்டில் இடம் கிடைக்கிறது. இதை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.