ஸ்காட்லாந்து அணி கேப்டன் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி வீரர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
2021ம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடந்து வருகின்றது. இத்தொடரில் நேற்று இந்திய அணி, ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி அடைந்தது.
கைல் கோட்சர் அவர்கள், விளையாட்டின் சிறந்த தூதர்கள். கோலியாக இருந்தாலும், வில்லியம்சனாக இருந்தாலும், ரஷீத் கானாக இருந்தாலும், அவர்களுடன் எங்கள் வீரர்கள் பேச வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஒரே மற்றும் சிறந்த வழி அதுதான் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, போட்டியின்போது ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கைல் கோட்சர், இந்திய அணி வீரர்கள் எங்களது ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஷ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஸ்காட்லாந்து அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அந்த அணி வீரர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியிட்டுள்ள ஸ்காட்லாந்து அணி, தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக விராட் கோலி மற்றும் சக இந்திய வீரர்களுக்குப் பெரும் மரியாதையை செலுத்துவதாக கூறியிருக்கிறது.