பணம் செழித்து கொட்டும் ஐபிஎல் தொடர் : ஆச்சரியப்படுத்தும் அணிகளின் ஏல விவரம் இதோ
ஐபிஎல் போட்டிகளில் தற்போது அதிகபட்ச விலை மதிப்புள்ள அணியைவிட, 15 மடங்கு கூடுதல் விலைக்கு புதிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. பில்லியன் டாலர் பணம் கொழிக்கும் ஐபிஎல் புதிய அணிகளின் பண விளையாட்டு குறித்து தற்போது பார்ப்போம் -
ஒவ்வொரு அணியும் தங்களது நகரை மையமாகக் கொண்டு தங்களை மிகப்பெரிய வணிக நிறுவனமாகவே மாற்றி விடுகிறது. வீரர்கள் அணியும் உடையில் அச்சிடப்படும் விளம்பரங்கள் மூலம் வருவாயை குவித்துக் கொள்கின்றன.
மேலும், ஒவ்வொரு தீவிர ரசிகரையும் தங்களது வருமானமாகவே பார்க்கின்றன ஐபிஎல் அணிகள். ஓர் அணியின் T-Shirt 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு தொப்பி ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகின்றன. சிகை அலங்காரம் தொடங்கி செருப்பு விற்பனை வரை விளம்பரதாரர் நிறுவனங்கள் வருவாயை ஐபிஎல்-லுக்கு கொடுக்கிறது.
10 விநாடி விளம்பரத்துக்கு 14 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணிகளின் மதிப்பு -
மும்பை இந்தியன்ஸ் - ரூ.447.6 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.446 கோடி
டெக்கான் சார்ஜர்ஸ் - ரூ.428 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.364 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.336 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.304 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.300 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.268 கோடி
கொச்சி டஸ்கர்ஸ் - ரூ.1,533 கோடி
சாஹாரா வாரியர்ஸ் புனே - ரூ.1,702 கோடி
சிவிசி கேப்பிட்டல்ஸ் - ரூ.5,600 கோடி
ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் - ரூ.7,090 கோடி